ரிப்பீட் ஷூ- திரை விமர்சனம்

டைம் ட்ராவல் மெசினை கால்ல போட்டு உதைக்கும் அளவுக்கு இந்த படத்தோட இயக்குனர் கல்யாண் கற்பனை கீழே இறங்கி இருக்கு இந்த கதை டைம் ட்ராவல் ஷூ வை பற்றிய கதையாக இருந்தாலும் ரொம்ப அதிகமாக, ரொம்ப நீளமாக சிறுமிகளை பாலியல் கொடுமை செய்யும் காட்சிகளும் ,கத்தல்களும் இருப்பது படம் பார்ப்பவர்கள் தாங்கி கொள்ள முடியலை , சாம் சி.எஸ் .முதல் காட்சியில் வாசிக்க ஆரம்பித்த சோகமான வயலின் பின்னணி இசையை படம் முடிந்தும் வாசித்து கொண்டிருந்தார் பாவம் .இடைவேளை யில் வெளியே போய்விட்டதால் அப்போ வாசித்தாரா என்று தெரியலை .
கதை- டுபாக்கூர் ரவுடி யோகிபாபு ஷூ வை அந்தோணி தாசன் தொலைத்து விட அவர் மகள் வேறு ஒரு ஷூ வை கொடுக்க அதை போட்டுக்கொண்ட யோகிபாபுவிற்கு பல நன்மைகள் நடக்குது பணக்காரன் ஆகிறார் ,உடனே அந்த சிறுமியை கண்டுபிடித்து அவள் ஆசை பட்டது போல் அவளின் சிறிய பழைய செருப்பு கடையை புதுப்பித்து கொடுக்க வரும் போது தான் சிறுமி யை அவள் அப்பா அந்தோணி தாசன் பணத்திற்காக பாலியல் குரூப்பிடம் விற்று ,ஒரு மலை பகுதியில் இருப்பதை அறிந்து காப்பாற்றி வர நண்பர்களோடு கிளம்புகிறார் .அதற்குள் அந்த சிறுமி மற்ற சிறுமிகளோடு சேர்ந்து அங்கிருக்கும் சில அடியாட்களை அடித்து விட்டு தப்பிக்கிறார்கள் ,மற்றவர்கள் சிறுமிகளை துரத்துகிறார்கள் ,இதற்கிடையே டைம் ட்ராவல் மெசினை கண்டுபிடித்த திலீபனும் இந்த சிறுமியை தேடி வருகிறார் இந்த துறத்தலில் டைம் ட்ராவல் மெஷின் செய்யும் மாஜிக் தான் படத்தோட கிளைமாக்ஸ்