யசோதா திரைவிமர்சனம்


நயன்தார, விக்னேஸ்வரன் தம்பதிகள் வாடகை தாய் வழியே குழந்தைகள் பெற்றெடுத்தார்கள் இந்த பிரச்சனையில் இருந்தே வாடகைத்தாய் சட்ட திட்டங்கள் , உங்க எல்லாருக்கும் ஓரளவு தெரிஞ்சுக்கும் யசோதா படத்துலயும் வாடகைத் தாய்களின் அவலத்தை காட்சியாக்கி இருப்பதால் நேரடியா கதையின் மையப்புள்ளிக்கு வந்திடுவோம் சமந்தா மாதிரியான பணத்தேவையுள்ள இளம் பெண்களை வாடகை தாயாக்கறாங்க வரலட்சுமி சரத்குமார், இவங்க நடத்துற இந்த ஆஸ்பெட்டலில் பிரசவ காலத்திற்கு முன்பாகவே சிசேரியன் மூலமாக குழந்தையை பிரசவிப்பதற்காக அழைத்து செல்வார்கள் பிறகு தாய் ,சேய் இருவரையும் காட்ட மாட்டார்கள் உயர் பாதுகாப்புடன் இருக்கும் இந்த ஆஸ்பெட்டலில் பெரிய தவறுகள் நடப்பதை உறுதிபடுத்திக் கொண்ட சமந்தா அதை கண்டுபிடிக்கும் போது தான் பல இளம் வாடகை தாய்களை கொலை செய்து வயிற்றில் இருக்கும் கருவில் இருந்து சீரம் தயாரித்து இளமை தோற்றம் தரக்கூடிய கிரீம் தயாரிப்பதாகவும் ,முதுமையில் இருப்பவர்களுக்கு இந்த சீரத்தை ஊசியின் மூலம் செலுத்தி இளமை திரும்பியதையும் கூறி ,தான் பணத்திற்காக தன் அப்பாவை விட 5வயது பெரிய மத்திய அமைச்சரை கல்யாணம் செய்து கர்பமாக இருக்கும் போது விசித்திர தோல் வியாதியால் பாதிக்கப்பட்டு அழகு குறைந்து ஓரிரு நாட்களிலேயே அறுபது வயது முதுமை வந்து விடுவதாக டாக்டர் கூறியதாக கூறினார்.இதற்கான மருந்தை தன்னை ஒருதலையாக காதலித்த டாக்டர் உன்னி முகுந்தன் கண்டு பிடிக்க அதை செலுத்தியப் பிறகு தான் மேலும் அழகானதாக சொல்லி இதில் நிறைய பணம் வருவதால் மத்திய அமைச்சரோடு சேர்ந்து இந்த ஆஸ்பெட்டலை நடத்துவதாக வரலட்சுமி சொல்கிறார். சமந்தா இதன் பிறகு சி பி ஐ டீம் சம்பத்துடன் எடுக்கும் ஆக்சன் காட்சிகளே படத்தின் முடிவு.
இது சமந்தாவின் தனி திறனை எல்லா கோணத்திலும் பதிவு செய்த படம், இயக்குனர் ஹெரி ஹெரீஷ் மக்களுக்கு தேவையான புதுமையான சம்பவத்தை சின்ன சின்ன திருப்பங்களோடு தந்திருக்கிறார்கள் அதே சமயம் யதார்த்தம் குறைவான பிலிம் மேக்கிங் படத்தின் உண்மை தன்மையை குறைக்கிறது. யசோதா சமந்தாவிற்கான முன்னேற்றம்

About Author