போர் தொழில் – ரசிகனுக்கு பயமா?? பாவமா ??? திரை விமர்சனம்

போர் தொழில் – ரசிகனுக்கு பயமா?? பாவமா ???
திரை விமர்சனம் –
வழக்கமான த்ரில் ,சஸ்பென்ஸ் ,வித்தியாசமான ஒரே மாதிரியான கொலைகள் இது படம் பார்ப்பவர்களை கொலைகாரனில் முதல் கொலைகாரன் யார் என்பது வரை அதாவது முதல் பாதி வரை சூடேற்றி விட்டு இரண்டாம் பாதியில் சுதி இல்லாமல் ஆக்கிவிட்டார் இயக்குனர் விக்னேஷ்ராஜா .
குறிப்பாக இரண்டு கொலைகாரர்களின் இரண்டு பிளாஷ் பேக்ஃகும் ரொம்பவே கொடுமை ,நடைமுறை வாழ்க்கையில் பார்க்காதது ,கேட்காதது .
பொண்டாட்டி நீ வேஸ்ட்டு நான் இதோ இவனோடு தான் ப …க போறேன்னு ரூமுக்குள்ள இன்னொருத்தனோடு போனாதான் புருசனுக்கு கொலவெறி வரும்னு சிந்தித்து எடுத்த காட்சிகள் வன்மத்தின் உச்சம் .தொய்வு .
கொலை செய்ய பட்ட பெண்களின் முகத்தில், கழுத்தில் , இருக்கும் ஒற்றுமைகள் கொலைகாரனை பிடிக்க உதவியாக இருக்கும் போது அதை தவணை முறையில் சரத்குமாரும் ,அசோக்செல்வனும் கண்டுபிடிப்பது காமெடி போலீஸ் போல தோன்றுது.
மறைந்த இயக்குனர் ராமதாஸ் இடத்தை நடிப்பில் பிடித்து விட்டார் தயாரிப்பாளர் தேனப்பன் .(நடிப்புக்காக காத்திருக்கும் ஆளுங்களுக்கு வாய்ப்பு கொடுங்க சார் அந்த குடும்பமாவது பிழைச்சு போகட்டும் )
கதை :- திருச்சியை சுற்றியுள்ள பகுதியில் மூன்று நாட்கள் இடை வெளியில் பெண்கள் பின் கை கட்டப்பட்டு வாயில் துணி கட்டி மண்டியிட வைத்து கொள்ளப்படுகிறார்கள் இதை கண்டு பிடித்து தடுத்தி நிறுத்தி கொலை காரனை பிடிக்க சீனியர் போலீஸ் எஸ் பி சரத்குமார் ,புதியதாக போலீசில் சேர்ந்த டி எஸ் பி அசோக் செல்வன் ,டெக்னிக்கள் அசிஸ்டெண்ட் நிகிலா வருகின்றனர் ,இவர்கள் வந்தும் கொலை தொடர்வதால் படம் முடியும் நேரமான இரண்டு மணி நேரத்திற்குள் கொலைகாரனை எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என்பது தான் கதையே .படத்தின் ஒளிப்பதிவு, குறிப்பா ஏரியல் ஷாட்ஸ் மற்றும் பின்னணி இசையும் பயத்தை உருவாக்காது .ரசிகனின் புரிதலே படத்தின் ஓட்டத்தை தீர்மானிக்கும்