படவெட்டு திரை விமர்சனம்

மத்திய அரசுக்கு பிரச்சார உருவங்களாக இருக்கும் இந்தி,தெலுங்கு கமர்சியல் ஹீரோக்களுக்கு இடையே தைரியமான கேரளா ஹீரோ நிவின்பாலியையும் கேரளா படைப்பாளிகளையும் வரவேற்கலாம் பஞ்சாப் மட்டுமல்ல இந்தியாவே எதிர்த்த அடிமை விவசாயத்தை எதிர்த்து பேசியிருக்கும் படம்
ஹீரோ நிவின்பாலி வீட்டை புதுபித்து கொடுக்கிறது ஜனசேவா அரசியல் கட்சி கவர்ச்சிகரமான பேச்சு,செயலால் அந்த கிராமத்தையே வளைத்து போட்டு தாங்கள் சொல்லும் விதை,உரம்,அதற்கான விலை என மக்களை அடிமை படுத்தும் போது சுதாரித்த நிவின்பாலியும் ,மக்களும் மண்வெட்டி போன்ற ஆயுதங்களை வைத்து அரசியல்வாதிகளை அடித்து விரட்டி அவர்கள் கான்செப்ட்டையும்அழிக்கிறார்கள் இது தான் கதை,அழகான இயற்கை வளம் கொண்ட கிராமத்தில் செயற்கையாக கலர் அடித்து கொண்டாட்ட சூழலை உருவாக்கி மக்களை ஏமாற்றுவதை துல்லியமாக காட்சியாக்கியிருக்கிறார் இயக்குனர் லிஜூகிருஷ்ணா கோவிந்வசந்தாவின் பின்னணி இசை தனித்துவத்தை காட்சிக்கு தந்து கூடுதல் உத்வேகத்தை தருகிறது