பகாசூரன்-திரைவிமர்சனம்

பகாசூரன் -திரைவிமர்சனம்
தொழில் நுட்பம்,நாகரிக வளர்ச்சி இரண்டிலும் எப்போதும் முதலில் ஏமாற்ற படுபவர்கள் பெண்கள் தான்,
பிறகு பல வழிகளில் பல தொடர்பியலில் அவர்கள் விழிப்புணர்வு பெறுவார்கள்.
அப்பாடா ஒரு வழியா கொஞ்சமா ஒரு நல்ல படத்தை இயக்கியிருக்கிறாரு மோகன் .ஜி
இன்றைய பெண் பிள்ளைகளுக்கான விழிப்புணர்வை தந்திருக்கிறாரு .முதல் பாதியின் விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் இல்லை ,ரொம்பவே பழைய கதையாக இருந்தாலும் திரைக்கதையில் ,எடுத்து கொண்ட பிரச்சனையில் விறு விறுப்பாக்கியிருக்கிறார்.செல் போன் தொடர்பால் செல்வராகவன் ,நட்ராஜ் குடும்பத்து பெண்கள் உட்பட பல நூற்று கணக்கான பெண்கள் ,கல்லூரி மாணவிகள் பாலியல் தொழிலில் தள்ளப்படுகிறார்கள் இதற்கு காரணமானவர்களை செல்வராகவன் கூலாக வதம் செய்கிறார்.
சிவன் கோவில் பிச்சையாக தான் வதம் செய்ய போனவர் வீட்டிலேயே படையல் சாப்பிட்டுவிட்டு ,அவர் மனைவி ,மகளிடம் சொல்லிவிட்டு ஒரு வில்லனை வதம் செய்யும் காட்சி ,
அடுத்து செல்வராகவனை வெளியே காத்திருக்க வைத்து விட்டு கரஸ்பாண்டென்ட் ராதாரவி தன் ரூமில் செல்வராகவன் மகளை மிரட்டி கெடுக்கும் காட்சி
இப்படி மாணவிகளின் பாதுகாப்பு பெற்றோர் இருக்கும் போதே பறிக்கப்படுகிறது என்ற பயத்தை ஏற்படுத்துகிறது .சாம்.csன் இசை விறு விறுப்பு ,பொறுப்பு .