சொப்பனசுந்தரி-திரைவிமர்சனம்

சொப்பனசுந்தரி -திரைவிமர்சனம்
ஒரு முறை படம் பாருங்க அப்புறம் இதை படிங்க
நோ ஹீரோ ,நோ லவ் ,நோ சாங் ,இப்படி சில நோ க்கள் இல்லனா வழக்கமான படங்கள்ல இருந்து வித்தியாசமான படமா வந்திருக்க வேண்டிய இந்த படத்துல இன்ட்ரெஸ்டிங்கான சில காட்சிகள் முழுமையாக இல்லாததால் படம் ஹிட்டு னு சொல்லறத்துக்கும் நோ சொல்ல வேண்டி இருக்கு .குளோஸ்-அப் காட்சிகளில் ஹீரோயின் என்பதை மறந்து ஐஸ்வர்யாவை சராசரி பெண்ணுக்கும் கீழே காட்டியிருப்பது ஏனோ?.ஹீரோயினை எந்த கேரக்டரில் ,எவ்வளவு under play வில் காட்டினாலும் படம் பார்க்கும் ரசிகனுக்கு எல்லா ஹார்மோனும் வேலை செய்ய வேண்டும் இதை இனி வரும் படங்களில் ஐஸ்வர்யா மறக்க கூடாது
கதை பெரிதாக இல்லாததால் முந்தைய கருத்துக்கள் பெரிதாக சொல்ல வேண்டி இருக்கு …
கதைய பார்ப்போம் -நகை கடையில் வேலை செய்யும் ஐஸ்வர்யா வுக்கு குலுக்கள் முறையில் கார் கிடைக்கிறது அந்த காரை விற்று தன் அக்கா கல்யாணத்தை முடிக்கலாம் என திட்டம் போடும் போது அந்த காருக்கு பங்கு கேட்டு உதவாக்கரை அண்ணன் கருணா ,அவர் மச்சினன் மைம் கோபி ,வருகிறார்கள் பிரச்னை போலீஸ் ஸ்டேஷன் போக அங்கு இருக்கும் இன்ஸ்பெக்ட்டர் சுனில்குமார் ஐஸ்வர்யா வுக்கு ரூட்டு போட சிக்கல்ல மாட்டிக்கிட்ட ஐஸ்வர்யாவ கோலமாவு கோகிலா நயன்தாரா மாதிரி புத்திசாலி தனமா செயல்பட வச்சு, தப்பிக்க வச்சு முடிக்கறாரு இயக்குனர் எஸ் ஜி சார்லஸ் .
லட்சுமி ப்ரியா ஊமையா நடிச்சு படத்துக்கு என்ன பிரயோஜனமுனு தெரியல ,சிரிக்க வச்ச சாரா எங்க போனாருனு நினைக்கும் போது நல்ல வேளை வந்து படத்தை முடிச்சாரு .