காந்தா திரை விமர்சனம் –
காந்தா திரை விமர்சனம் –
ரசிகர்களுக்கான படமா ? சினிமா புத்திசாலிகளுக்கான படமா? :-
இரண்டு மூன்று தலைமுறையாக மக்களால் மிக அதிகமாக அறியப்பட்ட ஒருவரின் வாழ்க்கையை சினிமாவாக எடுக்கிறேன் பார் என்று சொல்லிவிட்டு அதே காலத்தில் வாழ்ந்த பல புகழ் பெற்ற மனிதர்களின் கலவையாக ஒரு புகழ்பெற்ற கதாபாத்திரத்தை உருவாக்கி ஒரு தெளிவில்லாத biopic சினிமாவாக இன்றைய டைரக்டர்கள் எடுக்கிறார்கள்.
MGR போன்ற அழகான லுக்கில் ,ஜெமினிகணேசன் போன்ற காதலோடு
எம் .கே .தியாகராஜ பாகவதரின் வாழ்க்கையை மையமாக எடுக்கிறேன் பார் என்று காந்தா படத்தை இயக்கி இருக்கிறார் செல்வமணிசெல்வராஜ்.
சேலத்து மாடர்ன் தியேட்டர்ஸ் நினைவு படுத்தும் படி சென்னையில் ஒரு மாடர்ன் சினிமா ஸ்டூடியோ , புகழ் பெற்ற பத்திரிகை அதிபராக துல்கரின் மாமனாராக நிழல்கள் ரவி ,அய்யா கேரக்டரில் இயக்குனராக சமுத்திரக்கனி என இன்னும் நிறைய குழப்பமான கட்டமைப்பில் இந்தப்படம் இருக்கு .
BLOCKANDWHITE காலத்து கதை என்று எடுத்திருந்தால் எந்த முன் எதிர்பாப்பும் இல்லாமல் இந்த படத்தை ரசித்திருக்கலாம் .
கதை என்னான்னா .கடனில் இருக்கும் மாடர்ன் சினிமா ஸ்டுடியோவுக்காக ஹீரோ துல்கர்சல்மான் ,அவரின் குருநாதர் இயக்குனர் சமுத்திரக்கனியும் ,சமுத்திரக்கனி நடிப்புக்காக வளர்த்த ஹீரோயினும் ஒப்பந்தம் ஆகுறாங்க .முதல்நாள் சூட்டிங்கள்ல இருந்தே சமுத்திரக்கனி ஸ்கிரிப்ட் உட்பட எல்லாத்திலயும் தலையிடறாரு ஹீரோ இதனால் இருவருக்கும் மோதல் உருவாகுது .
கதை பாக்யஸ்ரீ ஹீரோயினை மைய படுத்தி இருந்தாலும் அவர் மேல் இருக்கும் காதல்ல கண்டுக்காம விடறாரு துல்கர் .படத்தின் கடைசி நாள் ஷூட்டிங் முடிந்த அன்று இரவு ஹீரோயின் சுடப்பட்டு கொல்லப்படுறாங்க .
இந்த கொலையை கண்டுபிடிக்க போலீஸ் அதிகாரி ராணா வர்றாரு ஷூட்டிங் நடந்த ஸ்டுடியோவுல எல்லோரையும் விசாரிக்கறாரு யார் கொலைகாரன் என்பதையும் கண்டுபிடிக்கறாரு .
துல்கர் சல்மான் நடிப்பு புதுஉணர்வை ரசனையை தருது கலக்கிட்டாரு .இவரை தவிர மற்ற யாருடைய நடிப்பும் பெருசா இல்ல குறிப்பா இரண்டாம்பாதி ரொம்பவே நீளம் தொய்வு .ஆனா அன்றைய சினிமா வாழ்க்கையை பார்த்தமாதிரி ஒரு உணர்வு இருந்தது
