கழுவேத்தி மூர்க்கன்-சாதி படமா சதி படமா ,திரைக்கருத்து

கழுவேத்தி மூர்க்கன் -சாதி படமா? சதி ?
திரைக்கருத்து:
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை ,இங்கு எல்லா சாதியினரும் பாகுபாடு இல்லாமல் வாழப் படுவதாக நம்பப் படுகிறது .
சென்னை விமானநிலையம் முதல் பாரிஸ் கார்னர் வரையிலான பிரதான சாலையில் (அரசியல் கட்சித் தலைவர்களின் சிலைகள் நீங்களாக)கிண்டியில் தீரன் சின்னமலைக்கு கம்பீரமான சிலை ,நந்தனத்தில் பசும்பொன் தேவர் மகனாருக்கு பிரமாண்டமான சிலை எங்காவது அம்பேத்கார் சிலை இருக்கா ????என்றால் இந்த சாலையில் தினசரி வந்து போவோருக்கே யோசிக்க தோன்றும் ,

இருக்கு ஆலந்தூர் பகுதியில் கூண்டுக்குள் தெரிந்தும் தெரியாமலும் ஒரு மூலையில் இருக்கும் ,இங்கேயே அம்பேத்கார் சிலைக்கு இந்த நிலை என்றால் ,கழுவேத்தி கிராமத்தில் கீழத்தெருவில் இருக்கும் அம்பேத்கார் சிலையின் நிலையை நினைத்துப் பாருங்கள் மறைக்காமல் விடுவார்களா?
கதை இங்கு தான் ஆரம்பம்:-சாதி சங்க தலைவர் வருகையால் அந்த மாவட்டசெயலாளர் ,மற்றும் சாதி ஆண்கள் கீழத்தெரு இளைஞர்கள் சொல்லியும் கேட்காமல் அம்பேத்கார் சிலையை மறைத்து ப்ளக்ஸ் வைக்கிறார்கள் .அடுத்த நாள் ப்ளக்ஸில் சாதி தலைவர் முகம் உள்ள இடம் கிழிக்கப்பட்டு அதன் வழியே அம்பேத்கார் சிலை தெரிகிறது .கோபமான சாதி தலைவர் மாவட்ட செயலாளர் பதவியை பறிக்க ,
கோபமான மாவட்ட செயலாளர் இதற்கு காரணம் என கீழத்தெருவில் படித்து இங்கிலீஷ் பேசக்கூடிய இளைஞசர் பூமிநாதனை(சந்தோஷ்) கொன்று பழியை சந்தோஷின் நெருங்கிய நண்பர் மூர்க்கனின்(அருள்நிதி) மேல் போடுகிறார்கள் .இதனால் தலைமறைவாகிறான் மூர்க்கன் ,அனாதை ஆகிறார்கள் கீழத்தெரு மக்கள்.தலைமறைவான மூர்க்கனுக்கு தான் சந்தோஷை கொல்ல வில்லை கொன்றவர்கள் யார் ?என தெரிகிறது அதன் பிறகு மூர்க்கன் எடுக்கும் நிலை என்ன என்பது தான் முடிவு .

இந்த பட இயக்குனர் கௌதம்ராஜ் தெளிவாக இரண்டு வேறு சாதியை சார்ந்த சந்தோஷ் ,அருள்நிதி இருவரும் உயிர் தோழன்களாக இருந்தார்கள் என்று நட்பை மட்டுமே ஆழமாக சொல்லி இருக்கிறார் கூடவே இந்த நட்பை அழிக்கும் அரசியலை ஆழமாக சொல்லி இருக்கிறார் .எங்கும் ஆழமாக சாதி பிரச்னையை பேச வில்லை சின்ன சின்ன டயலாக்ஸ் ,கேரக்டர்கள் வழியே சாதி படம் என்பதை உணர்த்தி இருக்கிறார் .எல்லா நடிகர்களும் ,குறிப்பாக அருள்நிதி பல காட்சிகளில் நீட் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவன் போல் நடிப்பில் முதல் இடம் பிடிக்கிறார்.இயக்குனர் தெரிந்து கொள்ள வேண்டியது பண்ணி வாழும் குடிசைகள் இப்போது எந்த கீழ தெருக்களிலும் அதிகம் இல்லை மிகை படுத்தி காட்டி அசிங்க படுத்த வேண்டாம் ,முடிந்தால் அடுத்த படத்தில் சட்டம் இருந்தும் அதை கண்டு கொள்ளாமல் ,சிங்கார சென்னை மாதிரியான பெரிய மா மாநகரங்களில் மனிதனே மனித கழிவை அள்ளும் கேவலத்தை காட்டுங்கள்

About Author