கண்ணைநம்பாதே- திரைவிமர்சனம்

கண்ணை நம்பாதே -திரைவிமர்சனம்
நடிக்கப்போவதில்லை என்று சொல்லி விட்டு சரியான நடிப்பை தந்திருக்கிறார் உதயநிதிஸ்டாலின் ,கொஞ்சம் சினிமா ஆர்வலர்களாக இருந்தால் போதும் இந்த படத்தின் அடுத்த அடுத்த காட்சிகள் என்ன என்பதையும்,பிரசன்னா ,பூமிகா ,ஸ்ரீகாந்த் இவர்களில் நல்லவர்கள் போலவும், கெட்டவர்கள் போலவும் யார் காட்டிக்கொள்கிறார்கள் என்பதையும் யூகித்து சொல்லி விட முடியும் அந்தளவிற்கு எளிமையான திரைக்கதையாக இருந்தாலும் ஹீரோ உதயநிதி ஸ்டாலினின் யதார்த்த நடிப்பு கதையின் கருவை காப்பாற்றுகிறது .பூமிகாவிற்கு இரவில் உதவி செய்ய போய் பிரச்சனையில் மாட்டிக்கொண்ட உதயநிதிக்கு உதவி செய்ய வந்த பிரசன்னா புது புது சிக்கலில் உதயநிதியை மாட்டிவிடுகிறார் .இந்த காட்சிகளில் பிரசன்னா ,உதயநிதிக்குமான combin ஷாட்டில் ,தனக்கான மொத்த பிரச்சனைகளையும் மனதில் தேக்கியிருக்கிறார் என்று ரசிகர்கள் உணரும் படி சிறப்பாக நடித்திருக்கிறார் உதயநிதி .ஆத்மிகா ,சதீஷ் ,சென்ட்ராயன் இன்னும் சிலர் நடித்திருக்கிறார்கள் .இயக்குனர் மு .மாறன் தன் முந்தைய படமான இரவுக்கு ஆயிரம் கண்களின் ,கதை ,திரைக்கதையை ,நடிகர்களை மட்டும் மாற்றி இந்த படத்தை இயக்கியது போல இருக்கு .திணிக்கப் பட்ட அனாதை ஆசிரம பெண்களின் ஹார்மோன் திருட்டு காட்சிகள் தனியாக தெரிகிறது .புதுசா ,ரசிக்கர மாதிரி அடுத்த படத்திலாவது செய்யுங்க இயக்குனர் .

About Author