இராவண கோட்டம்- திரைவிபர்சனம் வெற்றிடமா? வெற்றிக்கோட்டமா?

இராவண கோட்டம் -திரை விமர்சனம்- வெற்றிடமா? வெற்றிக்கோட்டமா?
ராமநாதபுரம் தண்ணி இல்லாத காட்டுக்கு மாத்திடுவேன் -இந்த வசனத்தை பெரிய அரசியல்வாதிங்க ,அதிகாரிங்க ,சின்ன அதிகாரிங்கள பார்த்து பேசறத நேர்லயும் ,சினிமாவுலயும் பார்த்திருக்கிறோம் ,
யாப்பா நீங்க சொல்றமாதிரி ராமநாதபுரம் தண்ணி இல்லத காடு இல்ல ,கோபிச்செட்டி பாளையம் மாதிரி பசுமையா குளுமையா திரும்பன பக்கமெல்லாம் தண்ணி இருந்தது ,முப்போகம் வெளஞ்ச பூமியா தான் இருந்தது .இப்படி வறண்டு போனதுக்கு என்ன காரணமுன்னு தெரியுமான்னு கேட்டு படத்தை இயக்குனர் விக்ரம் சுகுமார் ஆரம்பிக்கும் போது தெற்கு பகுதியில் இருந்து வந்த இன்னொரு அசுரன் ,கர்ணன்,மேற்கு தொடர்ச்சி மலை மாதியான படத்தை பார்க்க போறோமுன்னு தயார் ஆனா ,
படத்தின் காட்சிகள் நங்கூரம் இல்லாத கப்பல் மாதிரி படத்தை கரை சேர விடாம ஆக்கிடுச்சு .
சரி கதை என்னானு பாப்போம் சீமை கருவேலமரம் நிலத்தடி நீரை உறிஞ்சு எடுத்துகிட்டதால மாவட்டம் முழுவதும் தண்ணி பிரச்சனை எழுபது வருசமா இருக்கு . மேலத்தெரு ஜமீன் பிரபுவும் ,கீழத்தெரு பெரியவர் இளவரசும் ஒற்றுமையா இருந்து மக்களோடு இணைந்து சீமை கருவேலமரத்தை புடுங்கி சரிசெய்ய முயற்சிக்கறாங்க.இதை பிடிக்காத எம் எல் ஏ அருளதாஸ் ,மினிஸ்டர் தேனப்பன் ,கார்பரேட் முதலாளிகள் சேர்ந்து பிரபுவையும் ,இளவரசையும் கொல்றாங்க .அண்ணன் தம்பிகள் போல இருந்த சாந்தனு ,கீழத்தெரு சஞ்சய்சரவணன் இருவரும் இரண்டு ஊரும் பிரிந்து அடிச்சிக்கிறாங்க ,கொல்லப்படறாங்க கடைசியில் விடிவு கிடைக்காம போகுது .
இந்த கதையில் சந்தனு ,ஆனந்தி காதல், இந்த காதலுக்குள் நுழைந்த சந்தனு நண்பன் சஞ்சய் சரவணன் என தொடர்பில்லாத அதிக காதல் காட்சிகள் படத்தை தொய்வை தந்து ரசிகர்களை மைய கதையில் இருந்து விலக வைக்கிறது .இந்த மாதிரியான கதையில் நடிப்பில் வாழ வேண்டிய நடிகர்கள் ,வெறும் வசனத்தை மட்டுமே ஒப்பிக்கும் ஒண்ணாம் வகுப்பு பிள்ளைகள் போல ஒப்பித்து விட்டு செல்கிறார்கள் .யாருடைய நடிப்பும் ,டெக்னீஷியன்களின் படைப்பும் மனதில் பதியாமலே மறைகிறது ,மனதுக்குள் எந்த பாதிப்பும் இல்லாமல் வெற்றிடமாகிறது ..

About Author