ஆற்றல்-திரைவிமர்சனம்

Vidharth, Saritha in Aatral Movie Stills

ஹீரோ வித்தார்த் ரிமோட் கண்ட்ரோல் கார் கண்டுபிடிக்கறதன் மூலமாக ரோட்ல விபத்து நடக்காம தடுக்கலாம்னு கண்டுபிடிக்கறாரு இதற்க்கு பத்து லட்சம் தேவைப்பட அவர் அப்பா சார்லீ பத்து லட்சம் கடன் வாங்கறாரு ,அதை வீட்டுக்கு கொண்டுவரும்போது ஆகிஸிடென்ட் ஆகி இறக்கறாரு பணம் திருட்டு போகுது ,இதே மாதிரி சிட்டியில் பணம் நகை திருட்டு போகுது இதை பைக்கில் வரும் நாலுபேர் செய்யறாங்க ,இந்த நாலுபேரும் ஹீரோயின் வீட்டிலும் திருட வரும்போது ஹீரோ வித்தார்த் அவர்களோடு சண்டையிட்டு திருட்டு கும்பல் யார்?அதன் தலைவன் வம்சிகிருஷ்ணா என்பதையும் அவர்கள் தன் அப்பாவை கொன்றவர்களா என்பதையும் நண்பன் விக்னேஷ் காந்த் உடன் சேர்ந்து கண்டுபிடிக்கறாரு ,

வீட்ல சமைக்காம புட் ஆப்புல ஆர்டர் செய்தா வீட்ல பணம் ,நகை ,திருட்டு போகும் ஏன் கொலையே நடக்கும் என்கிற பயத்தை உருவாக்கி ,எச்சரிக்கை செய்திருக்கறாரு இயக்குனர் கே எல் கண்ணன் ,தேவையற்ற நிறைய காட்சிகளை குறைத்து இருந்தால்,இரண்டு மணி நேர படம் இன்னும் குறைந்து விறு விறுப்பாக்கியிருக்கும் ,ஹீரோயின்  ஹீரோ வித்தார்தின் மூன்றாவது தங்கையின் தோற்றத்தில் அதாவது ரொம்ப சின்ன வயதோடு இருப்பதை மாற்றி ஓரளவிற்கு பொருத்தமாக போட்டு இருக்கலாம்.கவனிக்க கூடிய கதை ஆனால் இயக்குனரின் திரைக்கதை அனுபவ இன்மை வெற்றி படத்தை தள்ளி வைத்திருக்கிறது  

About Author