அயோத்தி -திரைவிமர்சனம்

அயோத்தி -திரைவிமர்சனம் – முதல் பாதி எரிச்சலோடும் ,இரண்டாம் பாதி எமோஷனோடும் நகருது .
படம் பார்க்கறவங்க எமோஷன் நிறைஞ்சு ,செண்டிமென்ட் உணர்வோடு பார்க்கனுமுனு முடிவு செஞ்சி அதற்காக தமிழ் சினிமாவில் சொல்லி வந்த காட்சிகள் ,சிலவற்றை வைத்து இந்த படத்தை இயக்கி இருக்கறாரு ஆர்.மந்திரமூர்த்தி ,முகம் தெரியாத நாலு பேருக்கு நல்லது செய்யற மாதிரியான கதைகள்ல நடிக்கறதுக்குனு சேரன் ,சமுத்திரக்கனி ,சசிகுமார்னு மூணு பேர்தமிழ் சினிமாவுல இருக்காங்க. இதுல சசிகுமார் இந்த படத்துல முதன்மையான கதாபாத்திரத்தில் நடிச்சிருக்காரு .
மூடத்தனமான ,மூர்க்கத்தனமான. வட இந்தியன் யஷ்பால் சர்மா அயோத்தியில் இருந்து தன் மனைவி அஞ்சு அஸ்ராணி ,மகள் ப்ரீத்தி அஸ்ராணி ,மகன் அத்வைதுடன் தீபாவளி அன்று ராமேஸ்வரம் வருகிறார் ,வந்த இடத்தில யஷ்பால் சர்மா பாக்கு போட்டு துப்பின எச்சில்ல ஏற்பட்ட சண்டையில் விபத்து ஏற்பட்டு நீண்ட போராட்டத்திற்கு பின் அஞ்சு அஸ்ராணி இறக்கிறாங்க ,ஹிந்தி மட்டுமே தெரிஞ்ச அந்த குடும்பத்தை அஞ்சு அஸ்ராணிசடலத்தோட தமிழ் மக்களின் மனிதாபிமானத்தோடு பிளைட்ல அனுப்பி வைச்சு இது தாண்டா தமிழ் மண்ணுனு சொல்ல வைக்கிறாரு .சசிகுமார் மற்றும் சிலர் .வடா இந்தியர்கள் நான்கு பேரும் சிறப்பா நடிச்சிருக்காங்க என் .ஆர் ரகுநந்தன் பின்ணனி பலம் .முதல் பாதி எரிச்சலோடும் ,இரண்டாம் பாதி எமோஷனோடும் நகருது

About Author