ஃபர்ஹானா – திரை விமர்சனம் -கதைக்கு கருப்பு பர்தா(திரை )?

ஃபர்ஹானா – திரை விமர்சனம் -கதைக்கு கருப்பு பர்தா(திரை )?
நடிகர்களை விட இந்த படத்தில் மெட்ரோ ரயிலே அதிகம் நடித்திருக்கு எத்தனை cut shots ,close up shots , point of veiwe shots இயக்குனர் நெல்சன் வெங்கடேசின் கத்துக்குட்டி தனமான ஐஸ்வர்யா ராஜேசின் பாத்திரப்படைப்பில் கறை படிந்தது பெரும்பான்மையான குடும்ப பெண்களின் தியாகதில் ஏற்பட்ட கறையாகவே உணர முடிகிறது
இயக்குனரின் மனோவியாதி செல்வராகவன் பாத்திரம் வழியே வெளி பட்டிருக்குமோ என்ற சந்தேகமும் தோன்றுகிறது .
மூன்று குழந்தைக்கு தாய் ஐஸ்வர்யா ராஜேஷ் ,நன்றாக புரிந்து கொண்ட கணவன் ஜித்தன் ரமேஷ் ,சகோதரிகள் ,கட்டுகோப்பான அப்பா இவர்கள் இருந்தும் வெறும் செல்வராகவன் குரலை மட்டும் நம்பி ஐஸ்வர்யா ராஜேஷ் தேடி போகிறார் ,செல்வராகவன் பிச்சைகாரன் மூலம் கொடுத்த கிப்ட்டை திருட்டு தனமாக தன் பிள்ளைகளுக்கு தெரியாமல் பிரித்து பார்த்து மகிழ்ச்சி அடைகிறார் ,ஆபீஸ் டேபிள் மேல் வைத்து ரசிக்கிறார், என்றால் அவர் என்ன மாதிரியான கேரக்டர் என்பதை சொல்வதிலேயே இயக்குனரின் சிந்தனை தப்பாகிறது ,களங்கப்படுகிறது.
செல்வராகன் காதல்கொண்டேன் தனுஷ் போல் செமி சைக்கோ வா என்றால் அதுவும் இல்லை அவர் ஐஸ்வர்யாவை பழி வாங்குகிறாராம்…. ஐஸ்வர்யா செய்யும் பிரண்ட்லி கால் செண்டர் வேலையின் ப்ளஸை சொல்ல அனுமோல் கேரக்ட்டர் ,மைனசை சொல்ல ஐஸ்வர்யா தத்தா கேரக்ட்டர் என அபத்தமான திரைக்கதை , எல்லோரும் அவர்களின் தரப்பு தவறுக்கு நியாயம் கற்பித்தால் சரி என்னதான் முடிவு போலீஸ் வந்து ஐஸ்வர்யாவை எச்சரித்து விட்டு செல்வராகவனை கைது செய்கிறது .படம் முடிகிறது .