முதல் மரியாதை கிடைக்குமா இருக்கு?

முதல்மரியாதை கிடைக்குமா இவருக்கு ?
விமானம் போல் காஸ்ட்லி தளத்தில் பயணித்த தமிழ் சினிமாவை கம்மாக்கரையில் ,களத்துமேட்டில் பயணிக்க வைத்த கதை ஆசிரியர்கள் பி கலைமணி ,அன்னக்கிளி செல்வராஜ் மற்றும் சிலர் ,இந்த இருவரின் கதை சமகாலத்தையும்,சமூக மாற்றத்தையும் பேசியது ,சினிமா என்ற கதவை யார் வேண்டுமானாலும் திறக்கலாம் என்று இவர்கள் கொடுத்த தன்னம்ம்பிகை இன்றும் பல இளைஞர்களை சினிமாவில் சாதிக்க வைக்கிறது .பாரதிராஜா ,மணிரத்னம் என பல இயக்குநர்களின் திருப்பு முனை திரைப்படங்களின் கதைகள் ,வசனங்கள் இவர்கள் பேனா முனை தீட்டியதே,இவர்கள் இருவரும் தங்களின் அனுபவங்களை தங்களின் கதை வசனத்தால் சில படங்களை இயங்கினார்கள் ஆனால் அந்த படங்கள் வெற்றி அடையவில்லை ,இயக்குனர்களாக வெற்றி அடைய முடியவில்லை ,இது இன்னும் சில கதை ஆசிரியர்களுக்கும் பொருந்தும் .பாஸ்கர் சக்தி வெண்ணிலா கபடி குழு ,அழகர் சாமியின் குதிரை போன்ற படங்கள் மற்றும் சின்ன திரை கதை, வசனத்தில் வெற்றி அடைந்தவர், இவரும் வடக்கன் என்ற படத்தை இயக்க இருக்கிறார் ,வெற்றி பட இயக்குனர் என்ற முதல் மரியாதை இவருக்காவது கிடைக்குமா என்று காத்திருந்து பார்ப்போம் .

About Author