கமலுக்கு முதலில் லைட்டிங் செய்த வி ஐ பி யார் ?

திரு கமல்ஹாசன் அவர்களுக்கு இன்று 68வது பிறந்தநாள் .கமல்-60 நிகழ்ச்சியை அவரின் 60வது பிறந்த நாள் அன்று உருவாக்கினோம் .அப்போது அவரை பற்றி என்னிடம்    ஏவிஎம் சரவணன் அவர்கள் சொன்னதை கேளுங்கள் .களத்தூர் கண்ணம்மா படத்திற்கு பல சிறுவர்களை பார்த்தும் திருப்தி அடையாமல் இருந்தாராம் ஏ வி எம் மெய்யப்பச்செட்டியார் ஷூட்டிங் போகவேண்டிய நாள் நெருங்கி கொ ண்டிருப்பதால் கொஞ்சம் பதட்டத்தோடு  இருந்தாராம் .அப்போது வாய்ப்பு கேட்டு வந்த சிறுவன் கமலஹாசனை ஏ வி எம் சரவணன் அவர்கள் வீட்டிற்கு கூட்டிக்கொண்டு போனாராம் வீட்டில் எந்த நடிகரையும் சந்திக்காத மெய்யப்பன் அவர்கள் ஓய்வில் இருந்தாராம் .அப்போது சரவணன் தன்  அப்பாவின் பெட் ரூம் சென்று ஒரு சிறுவனை நடிப்பதற்காக அழைத்து கொண்டு வந்திருப்பதாக கூற உடனே பெட் ரூமிற்க்கு அழைத்து வர சொல்லி இருக்கிறார் .உடனே சிறு வயது கமல் பெட் ரூமிற்க்கு அழைத்து செல்லப்பட்டார் .வெளிச்சம் குறைவாக இருந்ததால் கமல் முகம் சரியாக மெய்யப்பன் அவர்களுக்கு தெரியவில்லை  .உடனே தன் அருகே இருந்த (டேபிள் லேம்ப்) மேசை மீது வைத்திருக்கும் லைட் எடுத்து கமலின் முகத்திற்கு நேராக ஒரு கேமரா மேனை அபோல டித்து பார்த்தாராம் .உடனே ஓகே சொல்லி நடிக்க சொன்னாராம் .அந்த அதிஷ்ட வெளிச்சம் இன்னும் கமலஹாசன் மீது ஒளித்து கொண்டிருப்பதாக நம்புகிறார்கள்

About Author