விஜய் -பெரிய இடத்து ஹீரோவா ?

சமூகத்தில் பெரிய இடத்தில் இருப்பவர்கள் சினிமா தயாரிக்க ஆசைப் பட்டால் தங்கள் இமேஜிற்கு சமமாக தேர்ந்தெடுக்கும் ஹீரோ நடிகர் விஜய் ,படம் வெற்றியோ ,தோல்வியோ ,கலெக்சன் கொடுக்குதோ இல்லையோ தங்கள் முதல் தயாரிப்பில் விஜயை தான் ஹீரோவா நடிக்க வைப்பார்கள் .ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்த முதல் படம் குருவி இதில் விஜய் ஹீரோவா நடித்தார் .விஜயை தன் மகன் உதயநிதி கம்பனியில் நடிக்க சொல்லி ,ஸ்டாலின் அவர்களே விஜய் வீட்டிற்கு சென்று பேசி சம்மதிக்க வச்சாராம் .கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தல தோனி ஆரம்பித்திருக்கும் புரடக்சன் கம்பெனி தமிழில் எடுக்க போகும் படத்திற்கு விஜய் ஹீரோவா நடிக்க இருக்கறாராம் ,ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பிராண்ட் அம்பாசிட்டராக விஜய் இருந்த போது டோனி உடன் பழக கிடைத்த வாய்ப்பு இன்றும் தொடருதாம் .