ஃபர்ஹொனா முட்டுக் கொடுக்க வேண்டுமா????
ஃபர்ஹொனா முட்டுக் கொடுக்க வேண்டுமா????
கவர்னர் பார்த்திமா பீவி போன்று பெண்கள் பல உயர் பதவிகள் மற்றும் கடை நிலை ஊழியர்களாகவும், ஆண்கள் மட்டுமே செய்த மீன் வெட்டும் தொழிலையும் செய்து(சைதாப்பேட்டை மார்க்கெட்)நாட்டிற்கும் வீட்டிற்கும் உழைத்து கொண்டுதான் இருக்கிறார்கள் இது வரவேற்க கூடியது …
இந்த படத்தின் முரண்பாடு என்ன?
மிக ஒழுக்கமான, அன்பான குடும்பத்து பெண் ஃபர்ஹொனா, சின்ன வயதில் மூன்று குழந்தைக்கு தாயானவள்,ஆபரேசன் செய்யப்பட்ட கைக்குழந்தையை பராமரிப்பவள் கணவனையும்,குடும்பத்தையும் விட்டு வேறு ஒரு ஆணை தேடி திருட்டுத்தனமாக போகிறாள் என்று ஏன் காட்ட வேண்டும், அவர் கேரக்டரை ஏன் படுகொலை செய்ய வேண்டும் (சப்ப கட்டாக அவள் திருத்தி கொண்டால் என்று அபத்தமான சில காட்சிகள்)
இந்துவோ, இஸ்லாமோ தேவையில்லாமல் பெண்களை ஏன் இப்படி காட்ட வேண்டும், படத்தின் கதைக்கு இது விவாதத்தை தவிர எந்த பிரயோஜனமும் இல்லை
இயக்குனர் நியாயம் கற்பித்து,பலரை வைத்து முட்டு கொடுக்காமல்
இனிமேலாவது சரியான புரிதலோடு படத்தை இயக்கவும்..